ரிக்ஷாவை தடுமாறி தள்ளிய தம்பதி.. ஆஹா போட வைக்கும் இளைஞரின் செயல்..

2141

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரந்தர் சேவாக். அதிரடி ஆட்டக்காரரான இவர், தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ஒரு மேம்பாலத்தில் அதிக லோடுகளை ஏற்றிக்கொண்டு, ரிக்ஷா வண்டி வந்துக்கொண்டிருந்தது. அந்த ரிக்ஷா வண்டியை கணவர் இயக்கியபடியும், மனைவி பின்பக்கமாக தள்ளிக்கொண்டும் வந்துள்ளனர்.

இதனை அவ்வழியாக பைக்கில் வந்த நபர் பார்த்து, அவர்களுக்கு உதவி செய்கிறார். இதுதொடர்பான வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், உதவிய அந்த நபருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement