“காலையில் வா தம்பி..” 50 வயது பெண்ணை கொடூரமாக கொன்ற இளைஞன்..!

2575

திண்டுக்கல் மாவட்டம் செட்டிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் மீனாட்சி. 60 வயதாகும் இவர், நந்தவனப்பட்டி செல்லும் சாலையில் தேநீர் கடையை நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று, கடையை அடைத்துவிட்டு, கடைக்கு உள்ளேயே மீனாட்சி படுத்திருந்துள்ளார். அப்போது, அந்த வழியாக போதையில் வந்த டேவிட் என்ற இளைஞர், டீ வேண்டும் என்று மீனாட்சியிடம் கேட்டுள்ளார்.

இப்போது கடையை அடைத்துவிட்டதால், நாளை காலை வரச்சொல்லி மீனாட்சி கூறியிருக்கிறார். இதனால், கடும் கோமடைந்த டேவிட், மீனாட்சியை தாக்கி கழுத்தில் அரிவாளால் வெட்டி கொலை செய்தார்.

மீனாட்சியின் சத்தம் கேட்கவே, அங்கு வந்த அக்கம் பக்கத்தினர், டேவிட்டை பிடித்து கட்டி வைத்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அந்த நபரை கைது செய்தனர்