மணமகளுக்கு பெருந்தொற்று..!மணமகனின் நெகிழ்ச்சி செயல்..!

444

ராஜஸ்தானில் ஷாபாத் நகரில் பரா பகுதியில் ஜோடி ஒன்று திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தது. அதற்கு முன், மணமக்களுக்கு பெருந்தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது.

இதன் முடிவுகள் வெளியானதில், மணமகளுக்கு பெருந் தொற்று இருப்பது உறுதியானது. எனினும், திருமணம் செய்து கொள்வதில் இருவரும் உறுதியாக இருந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து மணமக்கள் இருவரும் பெருந்தொற்று தடுப்புக்கான தனிநபர் பாதுகாப்பு உடைகளை அணிந்து கொண்டு திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு திருமணம் நடத்தி வைத்த நபரும் தனிநபர் பாதுகாப்பு உடைகளை அணிந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் மணமகன் பாரம்பரிய தலைப்பாகை மற்றும் கையுறைகளை அணிந்து கொண்டார். இதேபோன்று மணமகளும், முக கவசம் மற்றும் கையுறைகளை அணிந்துகொண்டார்.

Advertisement