மகளுக்கு பாலியல் தொல்லை.. தட்டிக்கேட்ட தந்தை கொலை !

318

அறந்தாங்கி பேராவூரணி சாலையில் உள்ள ரத்தினக்கோட்டை நரியங்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம்.விவசாய கூலி வேலை செய்யும் இவருடைய மகள்  சரண்யாவிற்கு இளைஞர் ஒருவர் அடிக்கடி தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

கடைவீதிக்கு சென்றபோது, அங்கு நின்றிருந்த இளைஞரை பெண்ணின் தந்தை தட்டிக்கேட்டதாக கூறப்படுகிறது.

இதில் தகராறு ஏற்பட, இளைஞர் தாக்கியதில் சரண்யாவின் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து அங்கு திரண்ட மகாலிங்கத்தின் உறவினர்கள், அறந்தாங்கி போலீசில் புகார் அளித்தனர்.

உடலை கைப்பற்றி விசாரணை நடத்திய போலீசார், தப்பியோடிய செல்வத்தை தேடி வருகின்றனர்.