கணவனை இழந்த இளம்பெண்.. 17 வயது சிறுவன்.. இறுதியில் நடந்த கொடூரம்..

414

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை அருகே உள்ள கீரக்காடு பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண் கணவனை இழந்து இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். இவர், நேற்று முன்தினம் மாடு மேய்க்க சென்ற நிலையில், எடக்காடு வனப்பகுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தலை மற்றும் உடலில் காயங்கள் இருந்ததை தொடர்ந்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனையில், அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது, தெரியவந்தது.

இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், இளம்பெண்ணை கொலை செய்த வழக்கில், அப்பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனை கைது செய்து, சிறார் சிறையில் அடைத்தனர்.

25 வயது பெண்ணை, 17 வயது சிறுவன் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி கொலை செய்த சம்பவம் அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of