Prank வீடியோ! அதிரடியாக கைது செய்யப்பட்ட YouTube பிரபலம்!

879

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த யூடியூப் பிரபலம் காங்குவா ரென். இவர் ‘பிராங்’ எனப்படும் குறும்பு வீடியோக்களை பதிவு செய்து, தனது யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்வது வழக்கம்.

இந்த நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு காங்குவா ரென், சாலையின் ஓரம் அமர்ந்திருந்த வீடற்ற ஒருவருக்கு கிரீம் பிஸ்கட்டில் இருந்த கிரீமை எடுத்துவிட்டு, அதில் டூத் பேஸ்ட்டை நிரப்பி கொடுத்தார்.

அதனை சாப்பிட்ட அந்த நபர் வாந்தி எடுத்தார். இவை அனைத்தையும் காங்குவா ரென் வீடியோ எடுத்து, தனது யுடூயூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், 15 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கபட்ட அந்த நபருக்கு, 22 ஆயிரத்து 390 அமெரிக்க டாலர்கள் இழப்பீடாக வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of