“என்னடா என்னை பேச வைக்கிறியா..!” சிங்கப்பெண்ணே பாடலுக்காக பொங்கிய YouTube!

1039

இயக்குநர் அட்லியும், விஜயும் மூன்றாவது முறையாக கூட்டணி சேரும் திரைப்படம் பிகில். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்த திரைப்படத்தை, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

சமீபத்தில் இந்த திரைப்படத்தின் சிங்கப்பெண்ணே பாடல், இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனால் விஜய் ரசிகர்கள் உட்பட படக்குழு பெரும் அதிர்ச்சியில் இருந்தது.

இதையடுத்து இந்;த பாடலை ஜுலை 23-ஆம் தேதி அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் இன்று விஜய் ரசிகர்கள் சிங்கப்பெண்ணே பாடலை பெரிய லெவலில் ஹிட் அடிக்க வேண்டும் என்று வெறித்தனமாக காத்துக்கொண்டிருந்தனர்.

ஆனால் அந்த பாடல் நீண்ட நேரமாக வெளியாகாததால், மீம்ஸ் கிரியேட்டர்கள் பல்வேறு மீம்களை வெளியிட்டு கலாய்த்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில் யு டுயூப் நிறுவனத்தின் (இந்தியா) டுவிட்டர் பக்கத்தில் ஒரு டுவீட் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், “நாங்களும் சிங்கப்பெண்ணே பாடலுக்காக காத்துக்கொண்டிருக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளனர்.

இதனை கண்ட விஜய் ரசிகர்கள் குஷியாக இருந்து வருகின்றனர்.