டிக்-டாக்கிற்கு போட்டியாக களமிறங்கிய YouTube..! புதிய செயலி அறிமுகம்..!

631

சீனாவில் தொடங்கப்பட்ட டிக்-டாக் செயலி,  தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த செயலியின் மூலம் சிலர் திறமைகளை வளர்த்து வந்தாளும், பலர் ஆபாசமான விஷயங்களுக்கு பயன்படுத்தி வந்தனர்.

இவ்வாறு இருக்க, இந்தியாவில் டிக்-டாக் செயலி தடை செய்யப்பட்டது. அமெரிக்காவிலும் தடை செய்யப்பட இருந்த நிலையில், அதனை ஆரக்கிள் என்ற அமெரிக்க நிறுவனம் வாங்கிக்கொண்டது.

இந்நிலையில், டிக்-டாக் நிறுவனத்திற்கு போட்டியாக யூடியூப் புதிய செயலியை அறிமுகம் செய்து வைத்துள்ளது. Shorts என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செயலி, முதலில் இந்தியாவிலும், அடுத்தடுத்து மற்ற நாடுகளிலும் அறிமுகமாக இருக்கிறது.

Shorts செயலியின் மூலம் பயனர்கள் 15 நொடி வரையிலான வீடியோக்களை பதிவேற்றம் செய்ய முடியும். ஏற்கனவே ரீல்ஸ் என்னும் வீடியோ பதிவேற்றும் செயலியை இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்த நிலையில், ஷார்ட்ஸ் செயலியோடு யூடியூப் களமிறங்கியுள்ளது.

Advertisement