YouTube-ல் சம்பாதிக்கும் மோகம்..! ராமியின் வில்லங்க வீடியோ..!

637

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் செல்லூர் மண்டலத்தைச் சேர்ந்த ராமி ரெட்டி என்பவர், வெல்டன் ராக்ஸ் என்ற யூ-டியூப் சேனல் நடத்தி வருகிறார். இவர், நான்கு சக்கர வாகனங்களின் கீழ் ஏதேனும் பொருட்களை வைத்து உடைப்பது போன்ற பல்வேறு வீடியோக்களை எடுத்து அவற்றை, யூ-டியூப்பில் பதிவேற்றம் செய்து வந்துள்ளார்.

அதற்கு பார்வையாளர்களிடையே வரவேற்பு இல்லாததால், வினோதமாக ஏதேனும் செய்து அதிக பார்வையாளர்களை பெற்று, பெருமளவு பணம் ஈட்ட முயற்சி செய்துள்ளார்.

அதன்படி, ரயில் வருகைக்கு முன்பு தண்டவாளத்தில் எரிவாயு சிலிண்டர், இருசக்கர வாகனங்கள், பட்டாசுகள் ஆகியவற்றை வைத்து ஆபத்துக்களை விளைவிக்கும் வகையில் வீடியோ எடுத்து தன்னுடைய  சேனலில் பதிவேற்றியுள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பார்வையாளர் ஒருவர், இதுகுறித்து ட்விட்டர் வாயிலாக ரயில்வே போலீசாருக்கு புகார் அளித்தார். இதனையடுத்து, விபரீத செயலில் ஈடுபட்ட இளைஞரை கைது செய்த போலீசார், யூ-டியூப் சேனலில் பதிவேற்றப்பட்டிருந்த அந்த வீடியோக்களை நீக்கினர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of