“அப்பவே அவர் சொன்னார்..” சந்திரபாபு நாயுடுவை காப்பாற்றிய ஜெகன்மோகன்..?

1012

ஆந்திராவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் சந்திரபாபு நாயுடு படுதோல்வி அடைந்து, ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராக பதவியேற்றார்.

இதையடுத்து ஜெகன்மோகன் ரெட்டி பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார். அதில் ஒன்று தான், சந்திரபாபு நாயுடு வசித்து வந்த வீடு சட்டவிரோதமாக ஆற்றுப்படுகை அருகில் கட்டப்பட்டுள்ளது என்று கூறி அதை இடிக்க நோட்டீஸ் அனுப்பினார்.

இதற்கு சந்திரபாபு நாயுடுவின் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆந்திராவில் கடுமையாக மழை பெய்து வருகிறது.

இதனால் சந்திரபாபு நாயுடுவின் வீட்டிற்கு செல்லும் பாதை வெள்ளத்தில் மூழ்கிவிட்டது என்றும், வெள்ளத்தினால் குடும்பத்தினர் அனைவரும் ஹைதராபாத்துக்குச் சென்றுவிட்டனர் என்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏ ராமகிருஷ்ணா தெரிவித்துள்ளார். இவரின் இந்த கருத்துக்கு மறுப்பு தெரிவித்து, சந்திரபாபுவின் மகன் பேட்டியளித்துள்ளார்.