அஜித் ரசிகர்களுக்கு மாஸ் அப்டேட் கொடுத்த யுவன்..!

748

தமிழ் சினிமாவின் முக்கியமான இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் சங்கர் ராஜா. இவர், தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தை உருவாக்கி, அதில் தன்னை பற்றிய தகவல்களை வெளியிட முடிவெடுத்துள்ளார்.

அதன்படி, இன்று தனது இணையதளத்தை வெளியிட்ட அவர், வலிமை படம் குறித்த மாஸ் அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

அதாவது, வலிமை படத்தில் அஜித்திற்கு மாஸான அறிமுக பாடல் உள்ளது என்றும், இந்த பாடலை இயக்குநர் விக்னேஷ் சிவன் தான் எழுதியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.

நீண்ட நாட்களாக அப்டேட் கிடைக்காமல் இருந்த அஜித் ரசிகர்களுக்கு, இந்த தகவல் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement