ராஜஸ்தானில் ஜிகா வைரஸ் கட்டுக்குள் உள்ளது – அமைச்சர் ஜே.பி.நட்டா

584

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஜிகா வைரஸ் கட்டுக்குள் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 22 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் ஜிகா வைரஸ் பரவல் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திடம் பிரதமர் அலுவலகம் விரிவான அறிக்கையை கோரியது.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஜிகா வைரஸ் பரவல் கட்டுக்குள் இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார். ஜிகா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாநில அரசுக்கு உதவுவதற்காக, மத்திய அரசின் உயர்மட்ட குழு ஜெய்பூரில் இருப்பதாக தெரிவித்தார்.

நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக குறிப்பிட்ட அவர், வைரஸ் பரவல் கட்டுக்குள் இருப்பதால், பொதுமக்கள் அச்சம் அடைய தேவையில்லை என்று கேட்டுக்கொண்டார்.

Advertisement